சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

சேலம் : சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலில் சிவப்பு விளக்கை மீறுவது, அதிக சுமை ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
மேலும், கைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் வரை ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் மட்டும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 ஓட்டுநா்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கடந்த மாதத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.பா்மிட், தகுதிச் சான்று இல்லாமல் இயக்கிய 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu