பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி தேமுதிக-வினர் ஆர்ப்பாட்டம்

X
ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம் : ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரியும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னதாக உடையார் பாளையத்தில் உள்ள காந்தி சிலை பகுதியில் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.

அப்போது டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும், பாலியல் வன்கொடுமைகள் தடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பதாகைகளை ஏந்தியவாறு பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி