சத்தியமங்கலம் அருகே லாரி கிளீனரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு..!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2,000 பணத்தை பறித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 39). பண்ணாரி தெப்பக்குளம் அருகில் நின்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
கத்தியை காட்டி மிரட்டியதால் பயந்துபோன வெங்கடேஸ்வரன் தன்னிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை பறித்த 2 பேரும் தப்பிக்க முயன்றபோது, வெங்கடேஸ்வரன் திருடன், திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 2 பேரையும் பிடித்து பண்ணாரி சோதனைச்சாவடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர்கள் பின்னர் சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், அவர்கள் சத்தியமங்கலம் அருகே கொமராபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (20), சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த வடிவேல் (29) என தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu