ஈரோடு: தபால் நிலையங்களில் கைரேகை வைத்து சேமிப்பு கணக்கு தொடங்கலாம்!

ஈரோடு: தபால் நிலையங்களில் கைரேகை வைத்து சேமிப்பு கணக்கு தொடங்கலாம்!
X
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் கைரேகை வைத்து சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் கைரேகை வைத்து சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கே.கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய தபால் துறை மூலம் படிவங்கள் இல்லாத பரிவர்த்தனை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆதார் எண், செல்போன் எண், பான் எண் ஆகியவற்றை தபால் நிலையத்தில் கே.ஒய்.சி. விவரங்களாக பதிவு செய்து சேமிப்பு கணக்கு தொடங்குதல், சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் (ரூ.5 ஆயிரம் வரை) உள்ளிட்ட பரிவர்த்தனைகளை செய்யலாம்.

இதற்கு படிவங்கள் ஏதும் தேவை இல்லை. கைரேகை மட்டும் போதும். இந்த வசதி ஈரோடு தபால் கோட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி தலைமை தபால் நிலையங் கள் மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் படிவங்கள் ஏதுமின்றி கைரேகை மட்டும் வைத்து தபால் அலுவலக சேமிப்பு கணக்குகள் தொடங்கி பயன் அடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story